Bigg Boss Azeem Lied About Shanavas

Photo of author

By Admin

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா, அமுதவாணன், மைனா நந்தினி, கதிர் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

-விளம்பரம்-

நேற்றுய நிகழ்ச்சியில் அமுதவாணன் 11,75,000 பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவரை தொடர்ந்து அசீம், விக்ரமன், மைனா, சிவின் ஆகிய நான்கு பேர் மட்டும் இறுதிப் போட்டி நோக்கி காத்துக்கொண்டிருந்தார்கள். பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக மிட் நைட் எலிமினேஷன் நடைபெற்றது. இதில் மைனா நந்தினி வெளியேற்றப்பட்டார். இதன்மூலம் அசீம் விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் இறுதிப்போட்டிக்கு தகுதியாக இருக்கிறார்கள்.

டாப் 3 Finalist :

-விளம்பரம்-

இந்த சீசனில் விக்ரமன் அல்லது அசீம் தான் டைடிலை அடிப்பார்கள் என்று ரசிகர்கள் பலரும் எதிர் பார்த்து வருகின்றனர். இந்த சீசனில் பல பரிட்சியமான முகங்கள் கலந்துகொண்டாலும் இந்த சீசனில் கண்டட் கொடுக்கும் நபராக இருந்தது அசீம் தான். இந்த சீசனில் ஆரம்பம் முதலே ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருவது அசீம் தான். இதுவரை பல முறை நாமிநேஷனில் வந்த போதிலும் ஒவ்வொரு முறையும் அதிக வாக்குகளை பெற்று காப்பாட்றப்பட்டு வந்தார்.

அஸீமிற்கு இருக்கும் ஆதரவு :

அடிக்கடி எதாவது பேசி சர்ச்சையில் சிக்கிகொள்வதை வாடிக்கையாக வைத்து வருகிறார் அசீம். என்னதான் கமல் அடிக்கடி அறிவுரை கூறி வந்தாலும் வார இறுதிக்கும் பின் மீண்டும் தனது அடாவடி தனத்தை தொடர்ந்து வருகிறார் அசீம். என்பதான் இவர் ஆக்ரோஷமாக விளையாடி வந்தாலும் இவர் தான் பிக் பாஸ் வீட்டில் உண்மையாக தனது குணங்களை காண்பித்து வருகிறது என்று சிலர் இவருக்கு ஆதரவும் தெரிவித்து தான் வருகின்றனர்.

-விளம்பரம்-

அடிக்கடி கேலிக்கு உள்ளாகும் அசீம் :

ஆனால், அடிக்கடி எதாவது பேசி சர்ச்சையில் சிக்கிகொள்வதை வாடிக்கையாக வைத்து வருகிறார் அசீம். என்னதான் கமல் அடிக்கடி அறிவுரை கூறி வந்தாலும் வார இறுதிக்கும் பின் மீண்டும் தனது அடாவடி தனத்தை தொடர்ந்து வருகிறார் அசீம். இருந்தும் எப்படியோ மக்கள் ஆதரவுடன் இறுதி போட்டி வரை வந்துவிட்டார் அசீம். இந்த சீசனில் அசீம் பேசிய பல பேச்சுக்கள் நெட்டிசன்களின் trollகளுக்கு உள்ளாகி இருகிறது.

அஸீமின் அடுத்த உருட்டு :

இதனால் அடிக்கடி ஓவரை ClownAzeem என்று ஹேஷ் டேக்குகளை போட்டு கேலி செய்தும் இருந்தனர். அந்த வகையில்ஒரு எபிசோடில் விக்ரமன் குறித்து பேசிய அசீம் ‘என்னுடைய அப்பா உடன் பிறந்த தம்பி. அதாவது, என் சித்தப்பா உடைய கட்சியில் அவன் உறுப்பினராக இருக்கிறான். அதனால் தான் அவன் என்னிடம் சரியாக பேசுவதில்லை’ என்று கூறி இருந்தார். அப்போது நெட்டிசன்கள் பலரும் அசீம் மாமா, ஆளூர் ஷானவாஸ் என்று கூறி வந்தனர்.

ஆளூர் ஷானவாஸ் விளக்கம் :

இந்த நிலையில் அசீம் குறித்து பேசி இருக்கும் ஆளூர் ஷாநவாஸ் ”‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான அசீம்m எங்கள் ஊர்க்காரர், அதே நேரத்தில் எனக்கு மிகவும் தெரிந்தவர், தூரத்து சொந்தமும் கூட ,ஆனால் அவர் கூறியது போல் அவர் என்னுடைய அக்கா மகன் கிடையாது. அவர் ஏன் அவ்வாறு கூறினார் என்பது எனக்கு தெரியவில்லை. எனக்கு அக்காவே இல்லை, ஒரு தங்கை மட்டுமே இருக்கிறார், அப்படி இருக்கும்போது அவர் எப்படி என்னுடைய அக்கா மகனாக இருக்க முடியும்’ என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Leave a Comment