பிக் பாஸ் தமிழ் சீசன் 6 டைட்டிலை வென்ற அசீம்.. கடைசியில் இன்ப அதிர்ச்சி.. எதிர்பாராத ஓட்டுக்கள்? | Bigg Boss Tamil Season 6 Title Winner Azeem

Photo of author

By Admin

Television

oi-V Vasanthi


Published: Sunday, January 22, 2023, 18:52 [IST]

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அசீம் வெற்றி பெற்றிருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அசீம் ஆரம்பத்தில் இருந்தே சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் கடைசியில் ரசிகர்கள் அவரை அதிகமாக ரசித்ததன் வெளிப்பாடு தற்போது வெற்றியை அடைந்திருக்கிறார்.

எதார்த்தமான ஒரு மனிதனாக நான் இருக்கிறேன் எந்த இடத்திலும் கோபம் வந்தாலும் அதை காட்டி விட்டு பின்பு மறந்து மன்னிப்பு கேட்கும் மனநிலை இருக்கிறது என்பதை அடிக்கடி கூறி ரசிகர்களையும் அதே வார்த்தையை அசீம் கூற வைத்திருந்தார்.

இந்த நிலையில் அசீம் வின்னர் ஆகவும், விக்கிரமன் ரன்னர் ஆகவும், ஷிவின் செகண்ட் ரன்னர் அப் ஆகவும் தேர்வாகி இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது.

கிராண்ட் பினாலே: முதலிடத்தை நழுவ விட்டு இரண்டாவது ரன்னர் அப் ஆன ஷிவின்.. மாற்றத்திற்கான காரணம்

சொன்னது நடந்து விட்டது

இணையத்தில் அதிகமான ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் வின்னர் யார் என்ற தகவல்கள் தற்போது கசிந்து இருக்கிறது. இந்த சீசனில் டைட்டில் வின்னர் விக்ரமன் அல்லது அசீம் தான் என்று கருத்து மோதல்கள் ஆரம்பத்தில் இருந்தே நடந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அனைத்தையும் தகர்த்தெறிந்து அசீம் வெற்றியை தொட்டு தழுவி இருக்கிறார். விடாமுயற்சியோடு மனதில் தீர்க்கமான செல்ஃப் கான்பிடெண்டில் இருந்த அசீம் ஆரம்பம் முதலே தான் இந்த சீசனில் டைட்டில் ஜெயிக்க தான் வந்திருக்கிறேன் என்பதை அடிக்கடி கூறிக் கொண்டிருப்பது போலவே தற்போது அது நடந்து விட்டது.

எதிர்பாராத சப்போர்ட்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இதுவரைக்கும் இல்லாத வகையில் பல்வேறு நிகழ்வுகளை ஏற்படுத்தியது. இந்த சீசனில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்தனர். இது இதுவரைக்கும் நடைபெறாதது. அது மட்டுமல்லாமல் இந்த சீசனில் கடைசி நேரத்தில் அதிகமான பிரபலங்களின் சப்போர்ட்டும் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு கிடைக்க தொடங்கியது. அசீமிற்க்கு எதிராக சின்னத்திரை நடிகர்கள் பலர் ஆரம்பத்தில் இருந்தே கருத்து கூறிக் கொண்டிருந்த நிலையில், கடைசி வாரத்தில் விக்ரமன் அசீம், ஷிவின் மூவரும் மட்டுமே இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் விக்ரமனுக்கு அரசியல் பிரபலங்கள் சப்போர்ட் கிடைக்க தொடங்கியது.

ரசிகர்களின் வாக்குகள்

இந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்தே அன் அபிஷியல் ஓட்டிங்கில் அசீம் தான் முன்னணியில் இருந்து வந்தார். ஆனாலும் ஒவ்வொரு வாரமும் அவர் செய்யும் பிரச்சனைகளை கண்டித்து கமல் அவருக்கு அறிவுரைகளையும் மன்னிப்புகளையும் கொடுத்துக் கொண்டிருந்தார். காரணம் அவருக்கு அதிகமான ஓட்டுகள் இருப்பது என்பதால், ஒவ்வொரு வாரமும் அவர் சேவ் ஆகி இருந்தாலும் அவருடைய ரசிகர்கள் அவர்தான் வின்னர் என்று உறுதியாக கூறிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே அசீம் 36.2 கோடி ஓட்டு வாங்கி முதலிடத்தில் வெற்றி பெற்று இருக்கிறார். இரண்டாவது இடத்தில் விக்ரமன் 35. 09 கோடி பெற்றிருப்பதாகவும், மூன்றாவது இடத்தில் ஷிவின் 25.09 கோடி பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

எதிர்பார்த்த மகிழ்ச்சி கிடைத்தது

இந்த நிலையில் அசீம் ஆசைப்பட்ட மாதிரியே அவர் வெற்றியும் அடைந்து விட்டார். அது மட்டும் அல்லாமல் அவருக்கு இன்னொரு மகிழ்ச்சியான நிகழ்வும் இறுதி பினாலே மேடையில் கிடைத்திருக்கிறது. அவருடைய மகன் அவர் ஆசைப்பட்ட மாதிரியே இவருடைய வெற்றியை நேரில் காண்பதற்காக பினாலேவிற்கு வந்திருக்கிறார். இதை அசீமுடைய ரசிகர்களும் அதிகமாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். சமூக வலைத்தளத்தில் தற்போது அசீமிற்க்கு அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed

English summary

Bigg Boss Tamil Season 6 Title Winner: Azeem has become the title winner of Bigg Boss Tamil Season 6. Although Azeem has been involved in controversies since the beginning of the Bigg Boss show, in the end he has achieved success due to fans liking him more. Azeem kept the fans saying the same thing by saying that often.

Story first published: Sunday, January 22, 2023, 18:52 [IST]

Leave a Comment