பிக் பாஸ் டைட்டில் ஜெயிக்க போகிற “அந்த” நபருக்கு 50 லட்சம் மட்டும் இல்லையாம்? வெளியான தகவல்கள் | Bigg Boss Tamil Season 6 Title Winner Total Amount

Photo of author

By Admin

Television

oi-V Vasanthi


Published: Sunday, January 22, 2023, 18:03 [IST]

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜெயிக்கப் போகிறவருக்கு 50 லட்சம் பரிசு தொகை என ஏற்கனவே அறிவித்து இருக்கிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி கட்டத்தில் இருக்கும் மூன்று போட்டியாளர்களும் வாங்கும் சம்பளம் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் டைட்டில் பரிசு பணத்தோடு போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் பணமும் சேர்த்து பல லட்சங்களை அள்ளிக் கொண்டு செல்ல இருக்கும் போட்டியாளர் சமூக வலைத்தளத்தில் பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது.

ஷார்ட் ஹேர்,தெளிவான பார்வை.. முதல் முறை வெளியான விக்ரமனின் சகோதரியின் புகைப்படம்.. இதுதான் காரணமா?

கிராண்ட் பினாலே

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றோடு முடிவடைய இருக்கிறது. இன்று பிரமாண்டமாக கிராண்ட் பினாலே நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று டைட்டில் ஜெயிக்கப் போகும் நபர் யார் என்று சமூக வலைத்தளத்தில் பல்வேறு கருத்துக்கணிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறுதி கட்டத்தில் விக்ரமன், ஷிவின், அசீம் மூவரும் இருக்கும் நிலையில் இவர்களுடைய ரசிகர்கள் மாறி மாறி தகவல்களை பரப்பி வருகின்றனர்.

அசீம் கூறிய டீலிங்

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் டைட்டில் ஜெயிக்கப் போகும் நபருக்கு 50 லட்சம் பணம் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். அதனால்தான் கடைசி நேரத்தில் கூட அசீம் தான் டைட்டில் ஜெயித்தால் தனக்கு கிடைக்கும் 50 லட்சத்தில் 25 லட்சத்தை கொரோனா காலகட்டத்தில் அம்மா அப்பாவை இழந்த பள்ளி குழந்தைகளுக்கு படிப்பு செலவுகளுக்கு நான் உதவுவேன் என்று வாக்கு கொடுத்து கொண்டு இருந்தார். இந்த நிலையில் இந்த டைட்டில் ஜெயிக்கப் போகும் நபர் பெற போகும் தொகை விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

சம்பள பணம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் 21 பேர் அறிமுகமானார்கள். இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் தான் அதிகமான போட்டியாளர்கள் அறிமுகம் ஆக இருந்தனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் குறிப்பிட்ட தொகை சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஒரு வாரத்திற்கு குறிப்பிட்ட ஒரு தொகையும் நாட்கள் செல்ல செல்ல அந்தத் தொகை அதிகப்படுத்தி கொடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயிக்கும் 50 லட்சத்தோடு அவர்கள் சம்பள பணமும் சேர்த்து பெரிய தொகை தான் ஜெயிக்கப் போகிறவர் தட்டிக் கொள்ள போகிறார்.

இத்தனை லட்சங்களா

அந்த வரிசையில் கடைசி வாரத்தில் இருக்கும் மூன்று போட்டியாளர்களும் 106 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த நிலையில் அவர்கள் ஒரு நாளைக்கு 20,000 சம்பளம் விகிதமாக சுமார் 21 லட்சத்து 20 ஆயிரம் பணம் பெற இருக்கிறார்கள். அதோடு பிக் பாஸ் டைட்டில் ஜெயிக்கப் போகும் தொகை 50 லட்சத்தையும் சேர்த்தால் 71 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் டைட்டில் ஜெயிக்க போகிற நபருக்கு கிடைக்க இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதைக் குறித்து ரசிகர்கள் பலர் இந்த தொகையை தட்டி தூக்க போகிறவர் யார் என்று ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed

English summary

Bigg Boss Tamil season 6 has already announced a prize money of 50 lakhs for the winner. In this situation, the salary details of the three contestants who are in the final stages of the Bigg Boss show have been revealed. The contestant who is going to take away several lakhs along with the prize money and the salary of the contestants for the Bigg Boss title. Various information is spreading on social media.

Story first published: Sunday, January 22, 2023, 18:03 [IST]

Leave a Comment