பிக் பாஸ் கொடுத்த கடைசி க்ளூ.. டைட்டில் வின்னருக்கு இப்படி ஒரு அறிவிப்பா!? கண்டுபிடித்த ரசிகர்கள் | Bigg Boss Tamil season 6 clue as to who is the title winner

Photo of author

By Admin

Television

oi-V Vasanthi


Updated: Saturday, January 21, 2023, 13:05 [IST]

சென்னை:பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பற்றி ரசிகர்களுக்கு தெரியும் வகையில் பிக் பாஸ் க்ளூ ஒன்றை கொடுத்து இருக்கிறது. அதை ரசிகர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர்.

இந்த வாரம் கடைசி எலிமினேஷனாக மைனா வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

இப்போது நடந்த ட்விஸ்ட் பார்த்து தான் ரசிகர்கள் இந்த சீசனின் டைட்டில் வின்னரை உறுதி செய்து இருக்கின்றனர்.

இந்த சீசன் டைட்டில் வின்னர் விக்ரமன் தான் என்ற தகவல்கள் இப்போது சமூக வலைதளத்தில் அதிகமாக பரவி வருகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமலஹாசன் வாங்கிய மொத்த சம்பளம்!? வெளியான தகவல்கள்

டைட்டில் வின்னர்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு நாள் மட்டும் தான் இருக்கிறது. நாளையோடு முடிவடைய இருக்கும் இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகரித்திருக்கிறது. சமூக வலைதளத்தில் விக்ரமன் மற்றும் அசீம் இருவருடைய பெயரையும் மாறி மாறி கூறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பிக் பாஸ் கடைசியாக வெளியிட்ட ப்ரோமோ மற்றும் வெளியேற்றம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்த வாரத்தில் ஏற்கனவே இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் இந்த வாரம் மீதம் இருக்கும் நான்கு போட்டியாளர்களும் கடைசி நாளில் மேடையில் ஏறுவார்கள் என்று ரசிகர் எதிர்பார்த்து இருந்தனர்.

பணத்தை எடுத்து இருக்கலாம்

ஆனால் கடைசி நேரத்தில் மைனா நந்தினியின் வெளியேற்றம் பிக் பாஸ் வீட்டிற்குள்ளே நடந்தது. இதுவரைக்கும் இல்லாத வகையில் புது முறையாக கடைசி வாரத்திற்கான எலிமினேஷன் நடைபெற்றது. வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் இருந்த மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியேற்றப்பட்டதும், அவருடைய ரசிகர்கள் பீல் பண்ணி இருந்தாலும் பலர் வருத்த பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர். காரணம் பிக் பாஸ் பணப்பெட்டி இரண்டாவது முறையாக வந்த நிலையில் அதில் இருந்த 13 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு அமுதவாணன் வெளியேறி இருந்தார். ஆனால் இந்த பணத்தை மைனா எடுத்திருந்தால் அவருக்கு உதவியாக இருந்திருக்கும் என்று பலர் கூறி வருகிறார்கள்.

இரண்டாவது முறை பணப்பெட்டி

ஏற்கனவே பிக் பாஸ் பணம் மூட்டையை வைத்த அடுத்த நொடியை அதை கதிரவன் எடுத்துக் கொண்டு வெளியேறி இருந்தார். மூன்று லட்சம் பணம் தனக்கு போதும் என்று அவர் எடுத்த முடிவு ரசிகர்களை மட்டுமல்லாமல் பிக் பாஸையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. இரண்டு நிமிடங்களுக்குள் யாரும் யோசிக்க விடாமல் கதிரவன் செய்த செயலால் பிக் பாஸ் மீண்டும் பணப்பெட்டியை வைத்தது. வைக்கும் போதே சொல்லித்தான் வைத்தது தாங்கள் எடுத்திருக்கலாம் என்று வேற யாரேனும் மனதிற்குள் நினைத்திருக்கலாம் அதனால் உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு நன்றாக யோசித்து செயல்படுங்கள் என்று கூறியிருந்தது. ஆனாலும் மைனா அந்த பணத்தை எடுப்பதைப் பற்றி எதுவும் யோசிக்கவில்லை. ஆரம்பத்தில் அமுதவாணன் நான் படம் பெற்று எடுக்க மாட்டேன் என்று கூறி இருந்தாலும், பிறகு 15 லட்சத்துக்கு மேலே வந்தால் நான் எடுத்து விடுவேன் என்று கூறியிருந்தார். அதுபடி இல்லாமல் கடைசி நேரத்தில் 13 லட்சத்தோடு அவர் வெளியேறியும் இருக்கிறார்.

முதல் மூன்று இடங்கள்

இந்த நிலையில் கடைசி வார எலிமினேஷனுக்கான ப்ராசஸ் நடந்தது அதில் பிக் பாஸ் புது முறையாக 6 என்கிற நம்பரின் அருகில் நாமினேஷனில் இருந்த நான்கு போட்டியாளர்களும் ஒவ்வொரு முறையும் மேலே கீழே இறக்கி காண்பிக்கப்பட்டனர். அப்போது விக்ரமனுக்கு ஒருமுறை மேலே ஏற்றி கீழே இறக்கப்பட்டார். அடுத்ததாக அசீம் இரண்டு முறை மேலே கீழே ஏற்றி இறக்கப்பட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து ஷிவின் மூன்று முறை மேலே கீழே ஏற்றி இறக்கப்பட்டு இருக்கிறார். இதை வைத்துதான் தற்போது ரசிகர்கள் இந்த முறை டைட்டில் வின்னர் விக்ரமன், அடுத்ததாக அசீம், அதை தொடர்ந்து மூன்றாவதாக ஷிவின் என்று பிக் பாஸ் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் என்று ஆதாரத்தோடு அடித்து கூறி வருகிறார்கள்.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed

English summary

Bigg Boss Tamil Season 6 is giving a clue to the fans to know about the title winner. The fans are discovering it. This week, Myna has been eliminated as the last elimination. The fans are confirming the title winner of this season only by seeing the twist that happened. The information that Vikraman is the title winner of this season is now spreading widely on social media.

Leave a Comment